பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்!

Share this News:

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணத்தால், சென்னை நீங்கலாக மாநிலம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து விடைத்தாள்களை திருத்தவும், மையங்களில் நெருக்கடியான சூழலை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வரக்கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் திருத்துபவர்கள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Share this News: