சென்னை (27 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதித்த மேலும் ஒரு நோயாளி தற்கொலை செய்து கொண்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது.
இந்த சூழலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஏற்கனவே நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒருவர் தற்கொலை கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.