மது போதையில் தகராறு – போலீசுக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை!

Share this News:

திண்டுக்கல் (14 பிப் 2020): திண்டுக்கல் அருகே போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட காவலரை பொதுமக்கள் நன்றாக கவனித்து அனுப்பினர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் பாண்டியராஜன். இவர் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது ஒருவர் மீது மோதியுள்ளார்.

யார் மீது மோதினாரோ அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் பாண்டியராஜன். மேலும் தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த அருகில் இருந்த பொதுமக்கள் பாண்டியராஜனை நன்றாக கவனித்து அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share this News:

Leave a Reply