தீபாவளி பட்டாசு – காவல்துறை எச்சரிக்கை!

Share this News:

சென்னை (20 அக் 2022): தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது குறித்து தமிழக போலீசார் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும்,125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பும் பட்டாசுகளை தயாரிக்கவோ, வெடிக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

பெட்ரோல் பங்க், எரிபொருள் கிடங்குகள், குடிசை பகுதிகளில் வாணவேடிக்கை நிகழ்த்தவும், பட்டாசுகளை கொளுத்தவும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், மருத்துவமனை, பள்ளி, நீதிமன்றம் மற்றும் வழிபாட்டு தலங்களில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கவும்,பட்டாசு பொருட்களை பேருந்து, ரயில், இருசக்கர வாகனம் ஆகியவற்றில் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தீபாவளியன்று உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க காலை 6 முதல் 7 வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply