ஆயுத பூஜை விற்பனை மந்தம் – வியாபாரிகள் கவலை!

Share this News:

சென்னை (24 அக் 2020): ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கான புஜைப் பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவாக ஆயுதபூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் மேலும் துலங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஆயுதபூஜை அன்று, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, தோரணம் கட்டி, பொரி, பழங்கள் படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த வகையில், ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்காக, தோரணங்கள், பழங்கள், பொரி வகைகள் சந்தைகளில் குவிந்துள்ளன. ஆனால், விலையேற்றம் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் கடந்த ஆண்டு ஆயுதபூஜை சிறப்பாக இருந்ததாகவும், இம்முறை மந்தமாக உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply