ஆயுத பூஜை விற்பனை மந்தம் – வியாபாரிகள் கவலை!

சென்னை (24 அக் 2020): ஆயுதபூஜை கொண்டாட்டத்திற்கான புஜைப் பொருட்கள் விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில், நாடு முழுவதும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதன் நிறைவாக ஆயுதபூஜை நாளையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் ஈடுபட்டுள்ள தொழில் மேலும் துலங்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் ஆயுதபூஜை அன்று, மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, தோரணம் கட்டி, பொரி, பழங்கள் படையலிட்டு வழிபடுவது வழக்கம்….

மேலும்...

கொரோனாவை வைத்து வியாபாரம் – பள்ளி சிறுவன் சஸ்பெண்டு!

லண்டன் (14 மார்ச் 2020): இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை வைத்து வியாபாரம் செய்த பள்ளிச் சிறுவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம்  செய்துள்ளது. இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆலிவர் கூப்பர். அந்த நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ரேடியோ கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இந்த மாணவன், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்தியை ரேடியாவில் கேட்டுள்ளான். உடனே, மெடிக்கல்…

மேலும்...

இந்தியாவில் தொழில் நடத்த அச்சமாக உள்ளது – டாட்டா சன்ஸ் நிறுவனம் பகீர் தகவல்!

மும்பை (20 ஜன 2020): இந்தியாவில் தொழில் நடத்துவதற்கு அச்சமாக உள்ளது என்று டாட்டா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் ஊழியர்கள் கடுமையாக உழைக்கும் திறன் படைத்தவர்கள் என்றும் அவர்களின் உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்வதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தொழில் கடுமையாக பாதிக்கப்படும். என்று தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்தித்து வரும் நிலையில் மோடி அரசு உரிய ஆலோசனையை பெற்று இந்த மந்தநிலையை…

மேலும்...

இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...