கோவை (06 மே 2020): கோவையில் அதிமுகவினர் ஆட்களுக்கு ஏற்றவாறு நிவாரண பொருட்களை வழங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர்களுக்கு கொரொனா நிவாரண பொருட்கள் தருவதாக கூறி அதிமுகவினர் டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மளிகை பொருட்களை பெற்ற பொதுமக்கள், அவை தரமற்றதாக இருப்பதாக குறி அதிமுகவினரிடமே திருப்பிக்கொடுத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளான முத்தண்ணன்குளம், பால்கம்பெனி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்களுக்கும், உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிமுகவினர் சார்பில் வழங்கப்பட்ட மளிகைபொருட்கள் உப்பு, சேமியா போன்ற பொருட்கள் அனைத்தும் தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கொரொனா நிவாரண பொருட்கள் கொடுத்த, அதிமுகவினரிடம் அப்பகுதி மக்கள் கேட்டதற்கு, எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுனன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியதாக கூறியுள்ளனர். தரமில்லாத பொருளை அவரது சொந்த நிதியிலிருந்து ஏன் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய பொதுமக்கள், நல்ல பொருளை அவரது தொகுதி நிதியிலிருந்து கொடுக்கலாமே என்றும் கூறினர்.