முன்னாள் அமைச்சருக்கு நடிகையுடன் தொடர்பு – எடப்பாடியையும் விசாரிக்க வேண்டும் – பகீர் கிளப்பும் புகழேந்தி!

Share this News:

சென்னை (22 ஜூன் 2021): முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் என்று புகழேந்தி பீதியை கிளப்பியுள்ளார்.

நடிகை சாந்தினியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தொடர்பாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகி உள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது

இந்நிலையில்தான், புகழேந்தி ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. இது பற்றி செய்தியாளர்களிடம் புகழேந்தி பேசும்போது , “மணிகண்டன் முதலில் சாந்தினியின் புகாருக்கு மறுப்பு தெரிவித்தார்… பிறகு சாந்தினி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்றார்… பிறகு 5 லட்சம் ரூபாய் சாந்தினிக்கு பணம் கொடுத்ததாக சொன்னார்.. பிறகு சாந்தினி அபார்ட்மென்ட்டில் 5 வருடங்கள் வாழ்ந்ததாக சொன்னார்..

இப்படி தொடர் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை அதிமுக தலைமை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை.. இதுவே அம்மா மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் ஒரே செகண்ட்டில் கட்சியை விட்டு மணிகண்டனை தூக்கியிருப்பார். ஆனால் தற்போதைய அதிமுக தலைமை மணிகண்டனுக்கு ஏன் துணை போகிறது? தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும்” என்றார்.

புகழேந்தி இப்படி சொல்லியிருப்பது அதிமுகவில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply