சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

Share this News:

சென்னை (03 பிப் 2020): சென்னை அயனாவரம் சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப் பட்டது.

சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தவர், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. அவரை, அதே குடியிருப்பில் வேலை செய்த காவலாளி பழனி, 40; பிளம்பர் ஜெய்கணேஷ், 23; லிப்ட் ஆப்பரேட்டர்கள் தீனதயாளன், 50; பாபு, 36, உட்பட, 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த, 2018 ஜனவரி முதல், ஜூன் வரை, இவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக, அயனாவரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, 17 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நிலுவையின் போது, பாபு என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இதர, 16 பேர் மீதான வழக்கு, ‘போக்சோ’ எனும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும், 2019 டிசம்பரில் முடிந்து, தோட்ட வேலை செய்யும் குணசேகரன் என்பவரை மட்டும் விடுதலை செய்து, மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில் 4 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு வழக்கமான ஆயுள்தண்டனையும் மற்ற 10 பேருக்கு சிறை தண்டனையும் விதித்து மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Share this News:

Leave a Reply