இந்தூர் (03 பிப் 2020) பாஜகவுக்கு பாகிஸ்தான் மீது ஏதிர்ப்பு இல்லை காதல் என்று இந்தி நடிகை ஸ்வாரா பாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஸ்வாரா, செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்திய குடியுரிமை சட்டம், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கும், ஊடுருவியவர்களை கைது செய்து வெளியேற்றுவதற்கும் ஏற்கனவே சட்ட நடைமுறைகள் உள்ளது. இப்போது புது குழப்பம் ஏன்?
பாகிஸ்தான் பாடகர் அத்னான் சாமிக்கு குடியுரிமை வழங்கியதுடன், அதன் அடிப்படையில் தற்போது பத்மஸ்ரீக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்படியானால் சிஏஏ.,வின் தேவை என்ன, அது எதை நியாயப்படுத்துகிறது?
ஒருபுறம் சிஏஏ.,வுக்கு எதிராக போராடும் எங்களை குற்றம்சாட்டுகிறீர்கள், தாக்குகிறீர்கள், கண்ணீர்புகை குண்டு வீசுகிறீர்கள். மற்றொரு புறம் பாக்., நாட்டை சேர்ந்தவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குகிறீர்கள்.
பாகிஸ்தான் மீது காதல் இருப்பதால்தான் பாஜக பாகிஸ்தானியருக்கு குடியுரிமையும், பத்மஸ்ரீ விருதும் வழங்கியுள்ளது என்று ஸ்வரா பாஸ்கர் சாடியுள்ளார்.