சென்னை (08 ஜன 2020): குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருந்தால் நான் முஸ்லிமாகவே மாற தயாராக உள்ளேன் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது சுயநலத்திற்காக கட்சி தாவும் ராதாரவி, திராவிட பாரம்பர்ய கொள்கையை அடகு வைத்து பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தில் பேசிய ராதாரவி , “நான் இவ்வளவு நாட்களாக ஏமாற்று கூட்டத்தில் இருந்தேன், இப்போது அதிலிருந்து விடுதலை பெற்றுள்ளேன். குடியுரிமை சட்டத்தை எல்லோரும் எதிர்க்கிறார்கள். இது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான சட்டமல்ல. இது இந்திய முஸ்லிம்களை பாதித்தால் நானே முஸ்லிமாக மாறிவிடுவேன்” என்றார்.
குடியுரிமை சட்டத்தில் முஸ்லிம்கள் இலங்கை தமிழர்கள் தவிர மற்ற மதத்தினர் இடமளித்திருப்பதை சாமர்த்தியமாக மறைத்து ராதாரவி பிரச்சாரம் மேற்கொண்டது அப்பட்டமாக தெரிந்தது.