தமிழகத்தில் சுழற்றி எடுக்கவுள்ள காற்றும் மழையும்!

Share this News:

சென்னை (01 டிச 2022): தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே டிசம்பர் 5ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரிக்கு நல்ல மழை இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

மேலும் அரபிக் கடலிலும், வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் இந்த சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share this News:

Leave a Reply