பெரியார் விவகாரத்தில் கி. வீரமணியிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி!

Share this News:

சென்னை (21 ஜன 2020): பெரியார் விவகாரத்திற்கு நடிகர் ரஜினி 2002 ஆம் ஆண்டே மன்னிப்பு கோரியுள்ளார்.

ரஜினி நடிப்பில் வெளியான பாபா படத்தில் வந்த ராஜ்யமா என்ற பாடலில் வரும் “அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி” என்ற வரிக்கு திக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்து அந்த வரியை நீக்க கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரஜினி,” கேசட்டில் தவறுதலாக இடம் பெற்றுவிட்டது படத்தில் இடம்பெறாது தவறுக்கு மன்னிக்கவும்” என்று தெரிவித்திருந்தார்.

பெரியார் விவகாரத்தில் அன்று மன்னிப்பு கேட்ட ரஜினி இன்று மறுப்பது காலத்தின் கோலமா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கிடையே 1971 பெரியார் ஊர்வலம் தொடர்பாக அவதூறாக பேசியதற்கு நீதிமன்றத்தில் ரஜினி மன்னிப்பு கேட்பார் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *