ரஜினிக்கு அதிமுக அமைச்சர் கண்டனம்!

Share this News:

சென்னை (21 ஜன 2020): ரஜினியின் பெரியார் குறித்த கருத்துக்கும் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதற்கும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெரியாரை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. திராவிட கழகம் மறுத்திருந்தும் மீண்டும் ஏன் பேசுகிறார்.

துக்ளக் பத்திரிகையில் இந்த தகவல் வெளிவந்துள்ளதாக கூறிய ரஜினிகாந்த், ஏன் துக்ளக் பத்திரிகை ஆதாரத்தை காட்டவில்லை? சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஆங்கில நாளிதழின் ஆதாரத்தை ஏன் காட்ட வேண்டும்? இதுவே அதில் உண்மை இல்லை என்பதை காட்டுகிறது.1971 சம்பவத்தை ஏன் ரஜினி இப்போது பேச வேண்டும்? உள்நோக்கத்துடன் அவர் பேசியிருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்ள முடியாது. மறுக்கத் தேவையில்லை மறக்க வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த் ஏன், 1971ல் நடந்த சம்பவத்தை இப்போது மறக்காமல் ஞாபகம் வைத்து பேசுகிறார். இதுவே பெரிய முரண்.

தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் பெரியார். அவருடைய புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நடந்தால் கட்டாயம் அதிமுக கண்டன குரல் எழுப்பும். எதையும் முழுமையாக அறிந்துகொண்டு பேசவேண்டும். போற போக்கில் பேசக்கூடாது. பெரியாரை ஏன் ரஜினி வம்புக்கு இழுக்க வேண்டும். அதுவே இங்கு முக்கியமான கேள்வி.

பெரியார் அனைவருக்கும் பொதுவானவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தோள்கொடுத்து அனைவர் நெஞ்சிலும் வாழ்ந்து வருபவர் பெரியார். இப்படி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெரியாரை பழித்து அரசியலுக்கு வரவேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது“ என்றார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply