சென்னை (21 டிச 2020): மாற்று கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாக கூறி இன்னும் தொடங்காத ரஜினி கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பல இழுபறிகளுக்கு இடையே சற்று குழப்பமான சூழ்நிலையில் ஜனவரி மாதம் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அது குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ரஜினி கட்சியின் பல மாவட்டச் செயலாளர்கள் 22 பேர் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து விளக்கம் கேட்க ரஜினி அறிவுறுத்தியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் கூறும் விளக்கம் திருப்தியாக இல்லாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ரஜினி தெரிவித்ததாக தெரிகிறது. மேற்கண்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு வரும் டிசம்பர் 31-ஆம்தேதி புதிய நிர்வாகிகள் பெயரை ரஜினி அறிவிப்பார் என்றும் தெரிகிறது.