வட்டி வியாபாரம் பார்த்த ரஜினி – பற்றி எரியும் தகவல்!

Share this News:

சென்னை (30 ஜன 2020): ரஜினி மீதான வருமான வரி மோசடி வழக்கு வாபஸ் பெறப்பட்ட நிலையில் அவர வட்டிக்கு கடன் கொடுத்தாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002-2003 மற்றும் 2004-05-ம் நிதியாண்டுகளில் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமானவரித் துறை மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை வருமானவரித் துறை நேற்று முன்தினம் வாபஸ் பெற்றது.

இதுகுறித்து வருமான வரித்துறையிடம் ரஜினி அளித்த விளக்கத்தில் கோபாலகிருஷ்ண ரெட்டிக்கு 18 சதவீத வட்டியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வழங்கியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதேபோல, அர்ஜுன்லால், சசி பூஷண், சோனு பிரதாப் ஆகியோருக்கு 68 லட்சம் வழங்கியதாகவும், 2003-04-ம் நிதியாண்டில் முரளி பிரசாத் என்பவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

2004-05ம் ஆண்டில் ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய் கடன் திரும்ப வரவில்லை என்றும், இதன் காரணமாக, 33 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

வட்டிக்கு கடன் கொடுத்ததை தொழிலாக கருதி செய்யவில்லை என்றும், தெரிந்தவர்களுக்கு மட்டுமே கடன் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று வழக்கை கைவிடுவதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரஜினி மீது வாடகை பாக்கி என்ற சர்ச்சையுடன் வட்டிக்கு பணம் கொடுத்த சர்ச்சையும் இணைந்து பரபரப்பை கிளப்பியுள்ளது.


Share this News:

Leave a Reply