சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Share this News:

சென்னை (30 டிச 2021): சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 8 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மழைநீர் தேக்கம் மட்டுமன்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, போக்குவரத்து நெரிசல், மழைநீர் தேக்கம் போன்றவற்றால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 2ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ,


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *