மும்பை (30 டிச 2021): பெருகிவரும் கோவிட் பரவலை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜனவரி 7ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மும்பை போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ளார்.
இ௹ஆ உத்தரவின்படி புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், விடுதிகள், ஓய்வு விடுதிகள் மற்றும் கிளப்புகளில் எந்த நிகழுகளுக்கும் அனுமதி இல்லை.
மீறுபவர்கள் மீது தொற்று நோய்கள் சட்டம் பிரிவு 188ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். முன்னதாக டிசம்பர் 24 அன்று, மும்பை மாநகராட்சியும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது.
நேற்றைய நிலவரப்படி, மும்பையில் புதிதாக 2,510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளனர். கோவிட் புள்ளிவிவரங்கள் செவ்வாய்க்கிழமையை விட 82 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், 84 வழக்குகள் ஓமிக்ரான் நோயை உறுதிப்படுத்தியுள்ளன.