சென்னை (14 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஹஜ் இல்லத்திற்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆன்மீக சுற்றுலாவிற்காக தமிழகம் வந்திருந்த 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை சிறையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.
இதனையடுத்து வெளி நாடு முஸ்லிம்களை சிறையிலிருந்து தமிழக ஹஜ் இல்லத்திற்கு மாற்றுவதாக முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
இவர்களை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும், சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பிட கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நாளை 14.7.2020 தமிழகத்தில் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நடத்த இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக அந்த அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார்.