அருப்புக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மூவர் பலி!

Share this News:

அருப்புக்கோட்டை (29 பிப் 2020): அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனம், கார் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

அருப்புக்கோட்டை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மாரி (55), பழனியம்மாள் (28), விஜயலட்சுமி (32) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் சென்ற மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply