சென்னை (08 பிப் 2021): சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து விடுதலை ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு முதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பிறகு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார் சசிகலா.
சசிகலா பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி இன்று புறப்பட்டார். காலை 10.30 மணியளவில் தமிழக எல்லைக்குள் வந்த அவருக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக கொடியுடன் பயணம் மேற்கொள்ள கூடாது என சசிகலாவை தமிழக போலீசார் எச்சரித்திருந்த நிலையில் ஏற்கனவே பயணித்து வந்த வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விடாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் காருக்கு மாறி பயணம் சசிகலா பயணம் மேற்கொண்டதாலும் போலீசார், அதிமுக கொடியை அக்கற்றும் முயற்சி கைவிட்டுப் போனதாலும் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.