தூத்துக்குடி (01 ஜூலை 2020): சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் திடீர் திருப்பமாக எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர், ஜெயராஜ், 63, , இவரது மகன் பெனிக்ஸ், 31, கடந்த ஜூன், 19 இரவு, 9:00 மணிக்கு ரோந்து வந்த உள்ளூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் கைது செய்யப்பட்டு போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் தந்தை மகன் இருவரும் போலீஸ் காவலில் மர்மமான முறையில் இறந்தனர்.
ஆனல் தந்தை மகன் இருவரும் போலீசாரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் எஸ்.ஐ.கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார், முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 போலீசார் மீது 4 பிரிவுகளின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதில் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.