பெங்களூரு (01 ஜூலை 2020): உலகம் முழுவதும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மத்திய சுகாதாரத்துறை சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதனைக் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் எனும் எச்சரிக்கை இருப்பினும், எதனையும் கவனத்தில் கொள்ளாமல், பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் கொரோனாவால் உயிரிழந்த பலரின் உடல்களை ஒரே குழியில், ஏதோ குப்பைய் கொட்டுவது போல் சுகாதாரத்துறையினர் வீசும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ளத்தை உருக்கும் வீடியோவுடன், வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார், கொரோனா பிரச்னையை இந்த அரசு எவ்வாறு கையாள்கிறது என்பதை இந்த வீடியோ பிரதிபலிப்பதாக விமர்சித்துள்ளார்.
மேலும், அரசு உரிய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோல் நடைபெறக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரக்கமற்ற செயல், கொரோனா குறித்த நடவடிக்கைகளில், கர்நாடக, பா.ஜ.க. அரசு மீதான கடும் விமர்சனங்களை மேலும் வலுவாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்குக் காரணமாண ஆறு பேரை சஸபெண்ட் செய்திருப்பதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.