ரஜினிக்கு சீமான் திடீர் ஆதரவு!

Share this News:

சென்னை (27 பிப் 2020): ரஜினி கர்நாடகாவில் கட்சி தொடங்கினால் ஆதரவளிப்பதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்து பல மாதங்கள் ஆனாலும் இன்னும் கட்சி தொடங்கவில்லை. எனினும் அவ்வப்போது ஏதாவது சொல்லி சிக்கலில் சிக்கிக் கொள்வது வாடிக்கை.

சமீப காலமாக ரஜினியை சீமான் அதிகமாக விமர்சித்து வந்தார். தற்போது சற்று அதனை தவிர்த்துவ் வருகிறார். மேலும் கட்சியின் எதிர்கால திட்டம் குறித்து இணையதள பாசறை நாம் தமிழர் கட்சியினருடன் பேசிய , ரஜினியை இழிவாக பதிவிடுவது தவறு. அரசியல், கொள்கைகள் மீது தான் எனக்கு அவரை பிடிக்காது. ஆனால், அவர் மீது அளப்பரிய மரியாதை வைத்துள்ளேன். என்றார்,

மேலும் கர்நாடகா அல்லது மராட்டியத்தில் ரஜினி கட்சி தொடங்கினால் எனது ஆதரவு அவருக்கு உண்டு என்றும் சீமான் தெரிவித்துள்ளர்.


Share this News:

Leave a Reply