சென்னை (26 ஜன 2020):5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வைப்பது குறித்த கேள்விக்கு எ.கே.ஜி மாணவர்களுக்கே நுழைவு தேர்வு வைக்கபடுகிறது என்று பதிலளித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
5 மற்றும் 8ம் வகுப்பு பள்ளிக்குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து பெற்றோர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது அரசு. இதனால் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஏழை எளிய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காகவே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தோல்வி அடைய மாட்டார்கள் 100க்கு 100 தேர்ச்சியே பெறுவார்கள்.
எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கும் நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டு வருகிறது. ஆகையால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என பேசியுள்ளார்.
இதனல் செங்கோட்டையனின் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.