மாணவர்களுக்கு சங்கு ஊதும் தேர்வு முறை – செங்கோட்டையனின் பதில்!

சென்னை (26 ஜன 2020):5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வைப்பது குறித்த கேள்விக்கு எ.கே.ஜி மாணவர்களுக்கே நுழைவு தேர்வு வைக்கபடுகிறது என்று பதிலளித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 5 மற்றும் 8ம் வகுப்பு பள்ளிக்குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்து பெற்றோர்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது அரசு. இதனால் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,…

மேலும்...

செங்கோட்டையனை ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுத வையுங்கள் – நாஞ்சில் சம்பத் பொளேர்!

சென்னை (26 ஜன 2020): கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடுவாரா? என்று நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு வைத்து மாணவர்களை மன உளைச்சளுக்கு உள்ளாக்கியுள்ளார்கள். செஙோட்டையனை இந்த தேர்வு எழுத வைக்க வேண்டும்.” என்றார்,. மேலும் ரஜினி பெரியார் விவகாரம் குறித்து தெரிவிக்கையில்,” துக்ளக் மேடையில் ரஜினி சொந்தமாக பேசவில்லை. அவருக்கு கொடுத்த ஸ்க்ரிப்டைதான்…

மேலும்...

5, 8-ம் வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத வேண்டுமா? – அமைச்சர் விளக்கம்!

சென்னை (21 ஜன 2020): “5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை!” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “5, 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேறு பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. குறைவான மாணவர்கள் இருந்தாலும் பயிலும் பள்ளியிலேயே எழுத நடவடிக்கை எடுக்கப்படும். 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு இன்று…

மேலும்...

5 ஆம் வகுப்பு 8 ஆம் வகுப்பு குறித்து வெளியான தகவல் வெறும் வதந்தி – அமைச்சர் விளக்கம்!

கோபிச்செட்டிபாளையம் (19 ஜன 2020): 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வேறு மையங்களில் நடைபெறும் என்று பரவும் தகவல் வதந்திதான் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில் குத்துவிளக்கு ஏற்றியும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தாா். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு அந்தந்த பள்ளிகளில் நடைபெறாமல் மாற்று…

மேலும்...