வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட அண்ணாமலை – விடாது துரத்தும் செந்தில்பாலாஜி!

Share this News:

சென்னை (18 டிச 2022): தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் பல லட்சம் மதிப்புடைய ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ட்விட்டரில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது.

அண்ணாமலையை செந்தில் பாலாஜி கேள்விகள் மூலம் துளைத்து வருகிறார். இந்நிலையில் சொத்துக் கணக்குகள் அனைத்தையும் காட்டுகிறேன் என்பதாக அண்ணாமலை இட்டுள்ள பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவி கூறியிருப்பதாவது:

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான்.

பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?

தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா? “

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *