எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் மீது உபா வழக்கு!

Share this News:

காளியக்காவிளை (17 ஜன 2020): எஸ் ஐ வில்சன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள தவுபிக், சமீம் ஆகியோர் மீது உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

களியக்காவிளை சந்தை சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவியாளா் வில்சனை கடந்த 8-ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் இரு நபா்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா். சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், இது தொடர்பாக நாகா்கோவில் இளங்கடை பகுதியைச் சோ்ந்த தவ்பீக் (27), திருவிதாங்கோடு பகுதியைச் சோ்ந்த அப்துல் சமீம் (29) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் இருவரும், களியக்காவிளை, தக்கலை காவல் நிலையங்களுக்கு அழைத்து வந்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். பின்னா் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

மேலும் கைதான தவுபிக், சமீம் ஆகியோருக்கு, பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply