சென்னை (19 ஆக 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி, உடல் நிலை ஆரம்பத்தில் சீராக இருந்தது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுவாசத்தை சீராக வைத்துக் கொள்ள தொடரும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.