உண்மையை சொல்லுங்கள் – தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி!

Share this News:

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பரிசோதனை கருவி தமிழகத்திற்கு எத்தனை வாங்கப்பட்டது என்பது குறித்து வெளிப்படைத் தன்மை இல்லை என்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முகநூலில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சட்டீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்!.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply