நியூயார்க் (18 ஏப் 2020): உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் உலகின் 200 க்கும் அதிகமான நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 23 லட்சத்து 6 ஆயிரத்து 016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 028 பேர் பலியாகி உள்ளனர். 5 லட்சத்து 88 ஆயிரத்து 633 பேர் மீண்டனர்.
முதலிடத்தில் அமெரிக்கா உலகிலேயே அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 7 லட்சத்து 12 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில், 37 ஆயிரத்து 268 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலியில், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 22 ஆயிரத்து 745 பேர் பலியாகி உள்ளனர்.அடுத்தபடியாக ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 726 பேர். இதில் 20 ஆயிரத்து 043 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் பாதித்தவர்கள் 1 லட்சத்து 47ஆயிரத்து 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,681 பேர் இறந்துள்ளனர்.ஜெர்மனியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 283 பேர் பாதிக்கப்பட்டு 4,403 பேர் பலியாகினர்.பிரிட்டனில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 217 பேர் பாதிக்கப்பட்டனர்.
15,464 பேர் பலியாகினர்.ஈரானில் 80 ஆயிரத்து 868 பேர் பாதிக்கப்பட்டு, 5,031 பேர் பலியாகினர்.பெல்ஜியத்தில் 37 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டு 5,453 பேர் பலியாகி உள்ளனர்.நெதர்லாந்தில் 31,589 பேர் பாதிக்கப்பட்டு 3,601 பேர் பலியாகி உள்ளனர்.கனடாவில் 31, 927 பேர் பாதிக்கப்பட்டு 1,310 பேர் இறந்துள்ளனர்.இந்தியாவில் 14,792 பேர் பாதிக்கப்பட்டு 488 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பானில் 9,787 பேர் பாதிக்கப்பட்டு 190 பேர் உயிரிழந்துள்ளனர்.பாகிஸ்தானில் 7,638 பேர் பாதிக்கப்பட்டு 143 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் வூகான் நகரில் கொரோனா தொற்று பரவ துவங்கியது. இங்கு பீதி காரணமாக ஏறக்குறைய 2 மாதங்களுக்கு மேல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சீனாவில் 82 ஆயிரத்து 719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,631 பேர் பலியாகி உள்ளனர்.