சென்னை (13 செப் 2020): “மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன் தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்”. என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால், தேர்வுக்கு தயாராகி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சமீபத்தில் தற்கொலை செய்துக்கொண்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைகள் குறித்து காணொளி காட்சியில் பேசியுள்ள ஸ்டாலின்,”மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் தற்கொலை செய்ததை கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படும் சூழலில் அவர்களுக்கு மன உறுதியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுங்கள் ப்ளீஸ்”. என்று பேசியுள்ளார்..