சென்னை (19 ஜூன் 2021): அரசுமுறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு, அதற்கான தளர்வுகளும் ஒவ்வொருவரும் அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஸ்டாலின் லண்டன் பயணத்துக்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கு அனுமதியும் ம் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த பயணத்தின் மூலம் தமிழ்நாட்டுக்கு தேவையான நலன்கள் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.