சென்னை (02 பிப் 2020): “அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெஞ்சு முழுவதும் வன்மம் குடியிருக்கிறது!” என்று திமுக தலைவர ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் செய்தி சேனலில் நேர்காணல் ஒன்றில் பேசிய அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்து பயங்கரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது! தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் இஸ்லாமிய அமைப்புகள் சில செயல்படுகின்றன!” என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் ”நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
’அக்னிப் பரீட்சை’
இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி#AgniParitchai #RajendraBalaji #BJP #ADMK #Rajinikanth #DMK #MKStalin pic.twitter.com/Y1BIOH6xe5
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 1, 2020
சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்வதோடு, சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.