இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – சிறுபான்மை ஆணையத்தில் அதிகரிக்கும் புகார்கள்!
புதுடெல்லி (13 பிப் 2023): நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தால் பெறப்பட்ட மொத்த புகார்கள் மற்றும் மனுக்களில் 71 சதவீதம் முஸ்லிம் சமூகத்துடன் மட்டுமே தொடர்புடையது. கடந்த ஐந்து ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம் சமூகம் தொடர்பான அதிகபட்ச புகார்கள் சிறுபான்மை ஆணையத்துக்கு கிடைத்துள்ளன. சிறுபான்மை விவகார அமைச்சின்…