நேர காலம் பார்த்து நிதானமாக ஆதரவளித்த ஸ்டாலின்!

Share this News:

சென்னை (12 மார்ச் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு தொடர் போராட்டத்திற்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆதரவளித்தார்.

சென்னை, வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் மற்றும் மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 27 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டங்களை பெண்களே முன்னின்று நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு திருமாவளவன், கருணாஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தமிழக சட்டப் பேரவையில் சிஏஏவை எதிர்த்து தமிழக கேரளா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களைப் போல தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்திவரும் போராட்டக் குழுவினரை அழைத்து சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடி சிஏஏ எதிர்ப்பு போராட்டக் களத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply