சென்னை (12 மார்ச் 2020): நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து, இன்று விஜய் வீட்டில் 8 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.