கரூர் (03 மார்ச் 2020): கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டியில் முதல் பரிசை கரூர் அணி தட்டிச் சென்றது. வெற்றி லெற்ற அணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து பரிசுகளை வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் வடக்கு நகர அதிமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி நேற்று மாலையில் துவங்கியது. இந்த போட்டிகளில் சென்னை, கரூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 46 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
பரபரப்பான இறுதிப் போட்டியில் கரூர் அணி முதல் பரிசையும், இரண்டாம் பரிசை கடலூர் அணியும், 3ம் பரிசை சென்னை அணியும் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கி பாராட்டினார்.