சென்னை (18 டிச 2019): சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தாக்குதல் நடத்திய போலீஸை கண்டித்தும் போராட்டம் நடக்கிறது.
சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று தினங்களாக உள்ளிருப்பு போராட்டதில் ஈடுபட்ட மாணவர்களில் 15 பேரை போலீசார் கடந்த புதன் இரவு (01-01-2020) கைது செய்துள்ளனர்.
முன்னதாக இவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.