மத்திய அரசு மீது சுப்பிரமணியன் சாமி காட்டம்!

Share this News:

சென்னை (04 மே 2020): புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ரயில்களில் கட்டணம் வசூலிப்பதற்கு பாஜக மூத்த தலைவர் திரு. சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக திரு. சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், பாதி பட்டினியில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கும் இந்திய அரசின் செயல் மோசமானது என கடுமையாக விமர்சித்தார்.

வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை இலவசமாக இந்திய அரசு அழைத்துவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள திரு. சுப்பிரமணிய சுவாமி, ரயில்வே நிர்வாகம், தொழிலாளர்களை இலவசமாக அனுப்ப மறுத்தால் பிரதமரின் கொரோனா நிதியில் இருந்து அதற்கான தொகையை வழங்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து , மத்திய ரயில்வே அமைச்சகத்துடன் தான் பேசியதாகவும், தொழிலாளர்களுக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு செலுத்தும் என்றும் 15 சதவீதத்தை மாநில அரசு செலுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் இலவசமாக பயணிக்கலாம் எனவும் அவர்கள் விளக்கமளித்ததாகவும் அடுத்த பதிவில் திரு.சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


Share this News: