எங்களுக்கு இப்போதைக்கு அனுமதி கொடுங்க – நடிகைகள் கோரிக்கை!

Share this News:

சென்னை (04 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை குஷ்பு, சின்னத்திரையில் வெளி ஊர்களுக்கு சென்று படப்பிடிப்பு இருக்காது என்பதால், தொழிலாளர்களின் நலனுக்காக படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார்.


Share this News: