சென்னை (17 ஜூன் 2021): பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை எஸ்வி சேகர் கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பாஜகவினரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
கோவை தெற்கு தொகுதியில போட்டியிட்டு கடைசி நேர இழுபறியில் கமலை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றவர் பாஜக வானதி. இவர் 3 நாளைக்கு முன்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவகத்தை திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவில், வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.. அந்த ஆபீஸ் ரூம்சுவரில் ‘தன லாபம்’ என மஞ்சளில் எழுதி வைத்து பூஜையும் நடத்தப்பட்டது.. இந்த விழா குறித்த போட்டோக்களை வானதியே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார்.
இந்நிலையில் பாஜகவின் எஸ்வி சேகர் வானதியை கிண்டலடித்தபடி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.அதில் வானதியின் ‘தன லாபம்’ வார்த்தையை கிண்டலாக விமர்சித்தபடி உள்ளது. எஸ்வி சேகர் இவ்வாறு ட்வீட் செய்திருப்பது வானதி ஆதரவாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
ஏதாவது பதவி, பொறுப்பு என்று எதிர்பார்த்து கிடந்த நிலையில், டெல்லி மேலிடம் இவரை கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. எனவே இப்படி சொந்த கட்சியை சேர்ந்தவர்களையே கலாய்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.