புதுடெல்லி (16 மே 2020): கொரோனா தொற்று எதிரொலியாக தனிமைப் படுத்தலில் இருந்த 700 தமிழக தப்லீக் ஜமாத்தினர் முழு தனிமைப் படுத்தல் முடிந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர்.
டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் இருந்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் பலர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு தனிமைபடுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசிற்கு தமிழக தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் மீட்டு வரவேண்டி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையின் பேரில், கொரோனா எதுவும் இல்லை என உறுதி படுத்தப்பட்ட 700 தப்லீக் ஜமாத்தினர் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பாட்டுச் சென்றனர்.