ஆசிரியர் தகுதி தேர்வு – வரும் 27 – 28 தேதிகளில் நடைபெறும்!

Share this News:

சென்னை (22 ஜன 2020): அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடக்ஙளுக்கான தேர்வு மே 2 மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஆர்பி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்த நவம்பரில் விரிவாக வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 60 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மே 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 1- ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 9- ஆம் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 17- ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *