தஞ்சை முதல் கொரோனா நோயாளி நிவாரணம் பெற்று டிஸ்சார்ஜ் -மாவட்ட ஆட்சியர் பாராட்டு

Share this News:

தஞ்சாவூர் (16 ஏப் 2020): தஞ்சை மாவட்டத்தின் முதல் கொரோனா நோயாளி நிவாரணம் பெற்று வீட்டுக்கு அனுப்பட்ட நிலையில் அவரை மாவட்ட கலெக்டர் வழியனுப்பி வைத்தார்.

கொரோனா தொற்று தமிழகமெங்கும் பரவி வரும் நிலையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 18 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தின் முதல் நோயாளி இன்று (வியாழக்கிழமை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கும்பகோணத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் கொரோனா சந்தேகத்தின்  பேரில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு வந்தார். அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஐந்தாவது நாள் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 14 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு கொரோனாவிலிருந்து முழு நிவாரணம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவரை மாவட்ட கலெக்டர் கோவிந்த ராவ் பூச்செண்டு கொடுத்து வழியனுப்பி வைத்தார். வீட்டுக்கு அனுப்பப்பட்ட பாஸ்கர் மாவட்ட  இந்திய ரெட்கிராஸ் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர் மருத்துவமனை டீன், மருத்துவ உதவியாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவ குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுக்களை தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply