ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 838,417 பேருக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உதவி!

Share this News:

புதுடெல்லி (16 ஏப் 2020): ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் 8,38,417 பேருக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு வழங்கியுள்ளது.

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று இரண்டாவது கட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டும் உள்ளது. மேலும் ஊரடங்கால் தினக் கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ரூ.10 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. சாதி மத பேதமின்றி 8,38,417 பேருக்கு உணவு பொட்டலங்கள், தேவையான அத்தியாவசிய பொருட்கள், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினரால் வழங்கப்பட்டன.

இதேபோல பல்வேறு அமைப்புகளும் உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply