புறக்கணிக்கப்படும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் – திருமாவளவன் பதில்!

Share this News:

சென்னை (15 மே 2020): வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு ‘வெளிநாடு வாழ் தமிழர்கள் நல வாரியம்’ அமைக்க அரசிடம் வலியுறுத்தப்படும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

ஜும் செயலி வழியாக பல்வேறு நாட்டினை சேர்ந்த தமிழ்மக்கள் திருமாவளவனுடன் உரையாற்றினார்கள்.

அதில் குறிப்பாக, கொரோனா காலத்தில் வேலை இழந்து ஊருக்கு செல்ல எத்தனித்துள்ள தமிழர்களை அழைத்துக் கொள்வதில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதையும் மற்ற மாநிலங்கள் இதில் முனைப்பு காட்டியிருப்பதையும் சுட்டிக் காட்டினர்.

இதற்கு பதிலளித்த திருமாவளவன், இதில் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.

மேலும் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” அமைப்பதிலும் தன்னால் ஆன முயற்சியை மேற்கொள்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.


Share this News: