புதுடெல்லி (16 மே 2020): கொரோனா பற்றி சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது நிதி ஆயோக் அமைப்பு.
“தேசிய ஊரடங்கு நடவடிக்கையால், இந்தியாவில் மே 16 ஆம் தேதி முதல் புதிய கொரோனா பாதிப்பு எதுவும் இருக்காது!” என கணிப்பு வெளியிட்ட நிதி ஆயோக் அமைப்பை திரு. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தேசிய ஊரடங்கை அமல் படுத்துவதன் மூலம் மே 16-ம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா- வினால் புதிய பாதிப்பு எதுவும் இருக்காது என்றும், கொரோனா வைரஸ் தொற்று சங்கிலி தகர்த்து எறியப்படும் என்றும் மத்திய நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்திருந்தது. அதற்கான வரைபடத் தகவலையும் வெளியிட்டிருந்தது.4
நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதாக திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் நிதி ஆயோக் அமைப்பின் கணிப்பை விமர்சித்துள்ள அவர், அந்த அமைப்பில் உள்ளவர்கள் தாங்கள் மேதைகள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் கொரோனா கணிப்பு வரைபடத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் திரு. ராகுல் வெளியிட்டுள்ளார்.
The geniuses at Niti Aayog have done it again.
I’d like to remind you of their graph predicting the Govt's national lockdown strategy would ensure no fresh Covid cases from tomorrow, May the 16th. pic.twitter.com/zFDJtI9IXP
— Rahul Gandhi (@RahulGandhi) May 15, 2020