திமுக எம்பிக்கள் மீது திருமாவளவன் பாய்ச்சல்!

Share this News:

சென்னை (14 மே 2020): திமுக எம்பிக்களின் பேச்சு தம்மை சார்ந்தவர்களை புண்படுத்தியதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் “ஒன்றிணைவோம் வா” என்ற முக்கிய நிகழ்ச்சி மூலம், கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனுக்களை அரசிடம் ஒப்படைத்து – அதன்மீது நடவடிக்கை எடுக்க வைத்துதிமுக சார்பில் மனுக்களை அளிக்க தலைமைச் செயலாளர் அவர்களை திமுக எம்பிக்கள் சந்தித்து பேசியபோது, தலைமை செயலர் வித்தியாசமாக நடந்து கொண்டதாக திமுக எம்பிக்கள் குற்றம் சட்டியுள்ளனர்.

அதில், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்ற சொல்லும் திமுக எம்பிக்கள் சார்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

திமுக எம்பிகளை தலைமை செயலர் நடத்தியதை திருமாவளவன் கண்டித்துள்ள அதேவேளை, ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டதற்காக திமுக எம்பிக்கள் மீது திருமாவளவன் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்.” என்று தெரிவித்துள்ளார்.


Share this News: