விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் விவகாரம் – மீண்டும் பிரசுரமாகும் 1971துக்ளக் கட்டுரை!

Share this News:

சென்னை (22 ஜன 2020): துக்ளக் விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்த 1971 துக்ளக் கட்டுரையை மீண்டும் வெளியிடப் போவதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம, செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பலரும் ரஜினியின் அவதூறு கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, outlook பத்திரிகையின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு பேசினேன், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தி.கவின் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் குறித்து அப்போதைய துக்ளக் இதழில் வெளிவந்த செய்தியை மீண்டும் மறுபிரசுரம் செய்ய இருப்பதாக அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,“ பல துக்ளக் வாசகர்கள் திகவின் 1971 சேலம் ஹிந்து கடவுள் அவமதிப்பு ஊர்வலம் பற்றி வந்த துக்ளக் இதழை மறுபடி வெளியிடும் படி கேட்டிருக்கிறார்கள். அந்த முழு இதழும் அவசியமில்லை. அதில் வந்த சேலம் பற்றிய விவரங்களை மட்டும் வருகிற இதழில் கொடுக்க நினைக்கிறோம்.“என பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply